Home » இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் Sunshine Tea Private Limited

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் Sunshine Tea Private Limited

by Damith Pushpika
September 15, 2024 6:00 am 0 comment

இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Sunshine Tea Private Limited தனது, செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் களப்பயணம் ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. இதன்போது, நிறுவனத்தின் தொழிற்பாடுகள் குறித்து அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சஞ்சீவ சரணபால விளக்கமளிக்கையில், 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனம், 1987ஆம் ஆண்டு SKS Exports என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்டு, 2007இல் Sunshine Tea Private Limited என தொழிற்பட்டு வருகின்றது. Sunshine Tea Private Limited நிறுவனத்தின் தாய் நிறுவனம் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் PLC ஆகும்.

இந்நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதோடு, தொழிற்சாலையில் 25 பெண் தொழிலாளர்களும், 75 ஆண் தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதி என்ற வகையில் இரு பிரிவுகளாக பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாகும்.

இந் நிறுவனத்தின் உற்பத்தி தொகுப்புப் பட்டியலில் முன்னணி வர்த்தக நாமங்களாக Zesta, Watawala, Gordon Frazer, Avan Tea, Teazup போன்றன காணப்படுகின்றன.

அத்தோடு, நிறுவனத்தின் கீழ் தேயிலை பயிரிடப்படவில்லை. தேயிலைத்தூள் ஏற்றுமதி மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் 70 முதல் 80 வரையான பங்களிப்பு காணப்படுகிறது. நாளாந்தம் 1.5 மில்லியன் கிலோ கிராம் தேயிலை பொதியிடப்படுகின்றன. தேயிலை பதப்படுத்தும் திறனானது ஆண்டுக்கு 11 மில்லியன் கிலோ கிராமிற்கும் அதிகமான தேயிலை பதப்படுத்துவதோடு பொருளாதார ரீதியிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிறுவனம் வேலைவாய்ப்பு மற்றும் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நிறுவனமாக காணப்படுகின்றது. வேலை வாய்ப்புகள் வழங்கும் போது பயிற்சி மற்றும் வளர்ச்சிகள் பற்றி அதிக கவனம் செலுத்துகிறது.

அத்தோடு, Great Place to Work (GPTW) Sri Lanka அமைப்பினால் 2024ஆம் ஆண்டு உற்பத்தி, தயாரிப்பிலும் சிறந்த 15 பணியிடங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இடம் பிடித்துள்ளது. Sunshine நிறுவனம் நவீன இயந்திரங்கள், தொழிநுட்பத்துடன் கூடிய, நவீன பதப்படுத்தும் தொழிற்சாலை என்ற வகையில் உயர்தர வசதிகள் கொண்டு காணப்படும் வர்த்தக நிலையமாக முன்னிலை வகிக்கின்றது.

அத்தோடு, தேயிலைத்தூள் பல பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலையை உரிய முறையில் பிரித்தெடுத்து 05 படிமுறைகளின் கீழ் தேயிலை பிரித்தெடுக்கப்படுகின்றது.

தேயிலையை பதப்படுத்தும்போது, தேயிலையை தூய்மைபடுத்துவது முக்கியமானதாக காணப்படுகிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேர அளவின் படி 14,855 கிலோ கிராம் தேயிலை பல்வேறு ஒழுங்குபடுத்தலுக்கு அமைய அரைக்கப்படுகின்றது. தேயிலை பதப்படுத்தல் மற்றும் அரைத்தல் போன்றவற்றிற்கு பின்னர் இறுதியாக தேயிலைக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படும். இந்த வாசனை திரவியங்கள் ஜேர்மனியிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. இதனால் தேநீர் சுவையானதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும். அத்தோடு, தேயிலையில் வாசனை திரவியம் பயன்படுத்துவதனால் உடல் ரீதியாக ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் ISO 9001 சான்றிதழ், FSSC 22000 சான்றிதழ், GMP (நல்ல உற்பத்தி நடைமுறைகள்) சான்றிதழ், Fair Trade சான்றிதழ் , Rainforest Alliance சான்றிதழ், Organic சான்றிதழ், Halaal சான்றிதழ் மற்றும் SMETA (Sedex Members Ethical Trade Audit) சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெற்ற நிறுவனம் என்பதாலும் உரிய முறையில் உற்பத்தியினை மேற்கொள்வதாலும் பக்கவிளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தி முடிவடைந்து தேயிலையின் தரத்தினை உரிய முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி தயாரிப்பு திட்டமிடல் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அந்நிறுவனத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்புக்கள் அனைத்தும் தனித்தனியாக தயாரிக்கப்படுவதோடு, Zesta, Watawala, Gordon Frazer, Avan tea மற்றும் Teazup ஆகிய உள்நாட்டு தயாரிப்புக்களோடு, வெளிநாட்டு தயாரிப்புக்கள் ஈரான், ஈராக், ஐக்கிய அமெரிக்கா, கனடா, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார். நிறுவனத்தின் துணை பொது மேலாளராக பணியாற்றும் சமீர ராஜாபக் ஷ மற்றும் P.A. Management ஆக பணியாற்றும் கபில சம்பத் ஆகியோர் தேயிலை பொதியிடல் பிரிவு பற்றி தெரிவிக்கையில்,

பொதியிடல் பிரிவில் உள்நாடு, ஏற்றுமதி என தனித்தனி பிரிவுகள் உள்ளன. இயந்திர உதவியுடன் சிறுபொதிகள், பரிசு பொருட்களாக தேயிலைத்தூள் பொதிகள் என பல வகைகளில் பொதியிடப்படுகின்றன. பொதியிடும் போது பொதியிடலுக்கு அவசியமான பைகள், label போன்றன வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு அமைவாக பொதி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அத்தோடு, தேயிலை பைகளில் staple pins பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதோடு, அதற்கு பதிலாக முடிச்சுக்கள்/ வேறு முறைகள் பயன்படுத்த ப்படுகின்றன.

ஒவ்வொரு தேயிலைத்தூள் கலவைகள் அடங்கிய பொதிகளும் மெருகேற்றப்பட்ட உறைகளில் பொதி செய்யப்படுகின்றன.

Sunshine Tea Private Limited நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரி விரோச்சன மஹாநாம தேநீரின் தரம் பற்றி தெரிவிக்கையில்,

தேயிலை பெற்றுக் கொள்ளும் பிரதேசங்களுக்கு அமைவாக தேயிலையின் தரம் காணப்படுகிறது.

கண்டி, திம்புள்ள, நுவரெலியா, உடப்புஸ்ஸல்லாவை, ஊவா, ருஹுண மற்றும் சப்ரகமுவ போன்ற பிரதேசங்களில் இருந்து தேயிலையை பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் தற்போது ஊவா பகுதியில் இருந்து பெற்றுக்கொண்ட தேயிலை உற்பத்திக்கு அதிகளவாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையினைக் கொண்டதாக காணப்படும்.

அத்தோடு, L/G OPI, OPA, PEK, FBOP, BOP, BOPE, Dust – 1, Dust, Silver Tips, Golden Tips, Zesta, Watawala, Ran Kahata போன்ற தேயிலைத்தூள் தயாரிப்புக்களும் காணப்படுகிறன.

Sunshine Tea Private Limited நிறுவனத்தின் தயாரிப்புக்கள் அனைத்தும் பல்வேறு ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்ட பின்னரே பொதி செய்யப்படுகின்றன. இவை தவிர பல்வேறு வகையான தேயிலை தயாரிப்புக்களையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதோடு, எதிர்காலத்திலும் பல்வேறான உற்பத்திகளை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

றிஸ்வான் சேகு முஹைதீன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division