1. இலங்கையில் வர்த்தக வசதிப்படுத்தலுக்கான பயண வரைடம்
உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதிப்படுத்தல் உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டு. அதில் உள்ளடங்கியுள்ள 36 கடப்பாடுகளை அமுல்படுத்துவதற்காக தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் குழுவை நிறுவுவதற்கு 2016ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்கீழ் 2017-–2030 காலப்பகுதியில் வர்த்தக வசதிகளை அமுல்படுத்தும் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது. அதற்கமைய அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த 200 தரப்பினரின் பங்கேற்புடன் ‘இலங்கைக்கான வர்த்தக வசதிப்படுத்தல் பயண வரைபடம்’ மற்றும் ‘வர்த்தக வசதிப்படுத்தல் செயற்திட்டம் 2025-2028’ தயாரிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சர்வதேச வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடுதல்.
சர்வதேச வர்த்தகத்தில் இலங்கைப் பெண்களால் நெறிப்படுத்தப்படும் வியாபாரங்களின் பங்கேற்பு மற்றும் போட்டியை அதிகரிப்பதற்காக சர்வதேச வர்த்தக நிலையத்துடன் நிதிசாரா புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை முன்மொழிந்துள்ளது. அதன் மூலம் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்போன்ற சர்வதேச வர்த்தகம் தொடர்பில் பயிற்சி பெறுதல் மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவியை பெறுவதற்கான இயலுமை கிடைக்கும்.
3. IFC Colombo 1 மற்றும் Gateway International Campus ஆகியவற்றை மூலோபாய முக்கியத்துவமுள்ள ஆரம்ப வியாபாரங்களாக பெயரிடுதல்.
ஒரு வியாபாரத்தை மூலோபாய முக்கியத்துவம் உள்ள வியாபாரம் என பெயரிடுதல் மற்றும் மேலே சொல்லப்பட்ட வியாபாரத்துக்கு விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட ஏற்பாடுகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த ஏற்பாடுகளின் கீழ் அதிகாரம் பெற்ற நபர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள IFC Colombo 1 மற்றும் Gateway International Campus ஆகியவற்றை மூலோபாய முக்கியத்துவமுள்ள ஆரம்ப வியாபாரங்களாக பெயரிடுவதற்கும், மேற்குறிப்பட்ட வியாபாரத்துக்கு விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. காசநோய்தொற்றுக்குள்ளானோர் மத்தியில் தடுப்பு சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ளுதல்
இலங்கையில் இரண்டாவது முன்னிலையில் உள்ள தொற்றுநோய் காசநோய் என்பதுடன், தொற்றுநோய் காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு பிரதான காரணமாகவும் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் காசநோய் தடுப்பு சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ற வகையில் இலங்கைக்கும் வழிகாட்டல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்பு மாதிரியின் வினைத்திறனை அவதானிப்பதற்காக காலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
5. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரிய இலக்கம் 135, பெரஹரா மாவத்தை, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள காணித் துண்டை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டத்துக்காக 99 ஆண்டு குத்தகைக்கு விடல்.
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரிய பெரஹரா மாவத்தை, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள 02 ரூட் 35.95 பேர்ச்சஸ் காணித் துண்டை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டத்துக்காக 99 ஆண்டு குத்தகைக்கு விட ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்டுள்ள குளோபல் லீசிங் லிமிட்டட்டுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் குறித்த காணித் துண்டை வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபை மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கலந்துரையாடல் கூட்டுக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
6. ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் தொடர்புடைய தரித்தல் சேவைக்கு இயக்க செயற்பாட்டு முகவரைத் தெரிவு செய்தல்.
ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் தொடர்புடைய தரித்தல் சேவைக்கு இயக்க செயற்பாட்டு முகவரைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமனு முறைமையைப் பின்பற்றி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கு ஏற்ப விபரங்களுடன் கூடிய பதிலளிப்பை சமர்ப்பித்துள்ள ஒரேயொரு விலைமனுதாரரான Lanka Sportreizen நிறுவனத்துக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. மெஹாவோட் 1 தொடக்கம் 5 வரையான கொள்ளளவு கொண்ட 165 மெஹாவோட் வரையான மொத்த கொள்ளளவு கொண்ட நிலத்தில் நிர்மாணிக்கப்படும் சூரிய சக்தி மின்னழுத்த மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குதல்.
20 உப நிலையங்களுக்கு 165 மெஹாவோட் கருத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. அனுராதபுரம், காலி மற்றும் தெனியாய உப நிலையங்கள் தவிர ஏனைய இடங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதற்கு 2024-.09-.02 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
9. இலங்கை மஹாவலி அதிகாரசபைக்கு உரிய நீர்த்தேக்கங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டத்தை அமுல்படுத்துதல்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக தற்போதுள்ள நீர்மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. அதற்கமைய, மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரந்தெனிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய 03 பிரதான நீர்த்தேக்கங்களை மஹாவலி அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளது.
மேற்குறித்த இடங்கள் தொடர்பாக ஏற்கனவே சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ரந்தெனிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. தண்டனைச் சட்டக் கோவை (திருத்த) சட்டம்
ஏதாவது முறையில் மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்வதற்காக தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம் செய்தல் மற்றும் அதற்காக பொருத்தமான சட்டத்தை தயாரிப்பதற்காக 2024-.04-.29 திகதி அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞர் தயாரித்துள்ள சட்ட வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலே சொல்லப்பட்ட சட்ட வரைபை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.