Home » IMFஐ நாடுவதை தவிர்த்து வீழ்ச்சியடைந்த நாடுகள்

IMFஐ நாடுவதை தவிர்த்து வீழ்ச்சியடைந்த நாடுகள்

பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு

by Damith Pushpika
September 15, 2024 6:21 am 0 comment

உலகப் பொருளாதாரத்தினுள் கடந்த இரண்டு மாதங்களில் அமைதியாக நடந்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தளங்களில் பலவிதமான பேச்சுக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நெருக்கடியானது 1980 களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கடன் நெருக்கடியைப் போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது. சத்தமில்லாமல் நடந்து வரும் கடுமையான கடன் நெருக்கடிக்கு முக்கிய ஊடகங்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளன. இதற்குக் காரணம் உக்ரைன்- ரஷ்யா போர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை மற்றும் வளர்ந்த நாடுகளால் கட்டமைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளாகும். இந்த நெருக்கடியில் சொல்லப்படும் ஒரு சிறப்பு உண்மை என்னவென்றால், கடன் நெருக்கடி உலகில் படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது என்பதாகும். இதன் விளைவாக, இருபத்தெட்டு நாடுகள் ஏற்கனவே கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அல்லது திருப்பிச் செலுத்த தவறும் நிலையில் உள்ளன.

இந்த நிலைமைக்கு மிகவும் தாக்கத்தைச் செலுத்திய இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று கொரோனா தொற்று. மற்ற விடயம் என்னவென்றால், கடந்த தசாப்தத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதம் இருந்ததாகும். அதன் காரணமாக, கடன் செலவு வெகுவாக அதிகரித்தது, இதன் காரணமாக, வளரும் நாடுகள் பெற்ற கடன்கள் மற்றும் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் கடன்களின் வட்டி விகிதம் அதிகரித்தது. கடன் தரப்படுத்தலில் தரம் தாழ்த்தப்பட்ட நாடுகள் கடன் சந்தைக்குச் சென்றபோது, ​​மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக, அதிக கடன் சுமை உள்ள நாடுகளின் மீதான அழுத்தம் வேகமாக அதிகரித்தது. இந்த விரைவான எழுச்சியின் விளைவாக, நிவாரணம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் பத்து நாடுகள் கடன் நிவாரணப் பட்டியலில் உள்ளன. உதாரணம் இலங்கை, கானா, சாம்பியா மற்றும் லெபனான். மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள கொங்கோ, கானா, லாவோஸ், மலாவி, சோமாலியா, சூடான், சிம்பாப்வே, சாம்பியா, மாலைதீவு போன்ற நாடுகள் கடன் நெருக்கடிக்கு மிக அருகில் உள்ளன அல்லது ஏற்கனவே கடன் நெருக்கடியில் விழுந்துள்ளன.

அடிப்படையாக, ஐந்து நாடுகளில் கவனம் செலுத்தினால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றாலும் கடன் நெருக்கடியை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியாத நான்கு நாடுகள் மீது கவனம் செலுத்துவோம்.

முதலாவது ஆஜர்ன்டீனா. இந்நாடு 1982ஆம் ஆண்டு முதல் தடவையாக நெருக்கடிக்குள் சிக்கியது. இதன் காரணமாக 40 பில்லியன் டொலர் கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் விடப்பட்டது. இதன் காரணமாக அதிக பணவீக்கம் ஏற்பட்டது.

வரிகளை அதிகரிப்பது, அரச செலவைக் குறைப்பது போன்றவற்றில் தேவையான கவனம் செலுத்தப்படுவதில்லை. இதன் விளைவாக, 2001இல் மீண்டும் நெருக்கடிக்குள் செல்ல நேர்ந்தது. அந்த நேரத்தில், நூறு பில்லியனுக்கும் மேலான கடன் தவணை ஏற்பட்டது. இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. அந்தச் சரிவினால் வறுமை நிலை அதிகரித்து அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டதன் ஊடாக ஆட்சிக்கு வரும் எந்த ஒரு அரசும் மிகக் குறுகிய காலமே ஆட்சியில் இருப்பதோடு குறுகிய காலத்தில் ஆட்சியை இழக்கும். எனவெ பொருளாதார நெருக்கடி பெரிய அரசியல் நெருக்கடியாக மாறி வருகிறது.

அதன் பின்னரான காலப்பகுதியினுள், அர்ஜென்டீனா 2001இல் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் குறிப்பிடத்தக்க கடனை தள்ளுபடி செய்தது. இருப்பினும்,அர்ஜென்டீனாவினால் அதன் பொருளாதாரத்தை நிலையானதாக கட்டியெழுப்ப முடியாது போனது.

நாணயம் வீழ்ச்சியடைவதால், மீண்டும் ஒரு தடவை பணவீக்கம் மற்றும் கடன் சுமை உயர்ந்தது. புவிசார் அரசியல் காரணங்களும் இதற்கு காரணமாக அமைந்தது. அதேபோன்று அதன் பின்னர், மீண்டும் ஒருமுறை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டு, முன்னேறிச் சென்றது. நாணயச் சரிவு மற்றும் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை காரணமாக, துருக்கி அதிக அளவிலான கடனைப் பராமரிக்கும் போது கடன் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதேபோன்று ஈக்வடோர் தொடர்பில் பேசும்போது, ​​1999இல் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த நாடாகும். ஈக்வடோரின் நிதித் துறை மற்றும் வங்கி கையிருப்பு குறைந்ததே இதற்குக் காரணமாகும். கடன் சுமை அதிகரிப்பால், பொருளாதாரம் டொலர் மயமாக்கப்பட்டது. அதாவது, நாட்டின் நாணயம் டொலருக்கு மாற்றப்பட்டது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதும் வெற்றியடையவில்லை.

அதன்பிரகாரம் மீண்டும் ஒருமுறை பொருளாதார நெருக்கடிக்கு செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடனையும் செலுத்தாத நிலை ஏற்பட்டது. ஈக்வடோரின் அப்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு மூலம் ஓரளவு நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டது. 2008 வரை இந்த வழியில் முன்னேறிய போதிலும், ஈக்வடோரின் பொருளாதாரம் மீண்டும் சரிந்தது. ஏனைய நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்கள் தொடர்பாக சட்டவிரோத கடன்கள் பற்றிய யோசனையை நாடு முன்வைத்தது, மேலும் அந்த யோசனை கடன்களை வழங்கிய நாடுகளால் முற்றாக நிராகரிக்கப்பட்டன.

ஈக்வடோர் கடன் மறுசீரமைப்பினால் ஓரளவு நிவாரணத்தைக் கண்டது. ஈக்வடோர் 2020இல் IMF மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் திரும்பியது. இதன்போது அந்நாட்டிற்கு 6.5 பில்லியன் டொலர்கள் பொதி வழங்கப்பட்டது. கடன் சுமையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வாங்கிய கடன்கள் குறித்து குறிப்பிட்ட தரவுகள் இல்லாததால் கடன் வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டது.

ஈக்வடோர் 2008ஆம் ஆண்டு கடன் மறுசீரமைப்பின் போது சில சலுகைகளை ஏற்படுத்திக் கொண்டது. மீண்டும் ஒரு தடவை கடன் நெருக்கடிக்குள் செல்வதைத் தவிர்ப்பதற்கு இது போதுமானதல்ல.

அதன் பிறகு, ஈக்வடோருக்கு அதிக வட்டியில் இந்தக் கடன் வழங்கப்பட்டது. அதேபோன்று நாட்டிற்கு கடன் வழங்குவதையும் கட்டுப்படுத்தியது.

ேகடனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு புரிந்துணர்வு இல்லையென்றால் உரிய முறையில் சட்டபூர்வமாக நிர்வகிப்பது தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்தும் நோக்கில் கடன்கள் வரையறுக்கப்பட்டன. நாட்டில் பல்வேறு விடயங்களுக்காக கடன் பயன்படுத்துவதன் காரணத்தினால் வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கும், மறுபுறத்தில் கடன் வழங்கும் தரப்பினரும் கடனைக் கட்டுப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்தது.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று சமீபத்தில் முன்னேற்றமடைந்த நாடு என்ற வகையில் ஜமெய்க்கா ஏற்றுக் கொண்டுள்ள உண்மை என்னவெனில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரினதும் பொதுவான கருத்து ஒன்றாக இருப்பது மிகவும் முக்கியமானது என்பதாகும்.

அவர்கள் அந்த பாதையில் பயணிப்பதன் ஊடாக நெருக்கடி மீண்டும் ஏற்படாது என்பதை புரிந்துகொண்டுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் முன் தமது நாடு அவமானப்படுத்தப்பட்டுவிடக் கூடாது எனப் பார்த்துக் கொண்டது ஜமெய்க்கா. இதன்போது அனைவருமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒரே பாதையில் பயணிப்பது மிக முக்கியமாகும். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கும் நாடுகளுக்கு ஜமெய்க்கா ஒரு முன்னுதாரணத்தை வழங்குகிறது.

சுபத்ரா தேசப்ரிய தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division