30
இலங்கை நமது தாய் வீடு – இது
பாரெல்லாம் போற்றும் எழில் வீடு
வீரர்கள் தோன்றிய புகழோடு – பல
வெற்றிகள் கண்ட படை வீடு!
பொன்னுடன் வைரமும் முத்தோடு பல
நள்மணி நிறைந்த திருவீடு
மன்னரும் காணாச் சிறப்போடு – பெரும்
மாண்பினை வளர்த்த தவவீடு!
வேதங்கள் ஒலிக்கும் இறைவீடு – தனிக்
கருணையைத் தந்த நல்வீடு
மாந்தர்கள் யாவரும் பண்போடு – சன்
மார்க்கமும் கண்ட அருள் வீடு!