தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன், என சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகவத்சிங்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு, தனக்கு நஞ்சு கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம் கிரேக்க நாட்டு சிந்தனைாளர் சாக்ரட்டீஸ்.
வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.
ஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னாராம் காந்தியடிகள்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நுாறு டொலர்களுக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான் என்றார் வின்சன்ட் சேர்ச்சில்.
தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாராம் ஜவஹர்லால் நேரு.
புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னாராம் அறிஞர் அண்ணா
ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாகடர் ராதாகிருஷ்ணன்.
“கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.
ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்றார் விவேகானந்தர்.
கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.