NDB வங்கியானது SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2023/2024 இல் தங்க விருதை வென்று சாதனை படைத்துள்ளமையை அறிவிப்பதில் பெருமையடைகின்றது. இந்த கௌரவமிக்க அங்கீகாரம் NDB க்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதுடன் புதுமையான பயிற்சி முயற்சிகள் மூலம் அதன் குழுவை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.
இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (SLITAD) மக்கள் அபிவிருத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக 2023/2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க மக்கள் அபிவிருத்தி விருதுகள் நிகழ்வினை 5வது தடவையாக நடத்தியது. இந்த விருதுகள் உலகளாவிய மற்றும் பிராந்தியத்தின் சிறந்த நடைமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு, முழுமையான மனித வள மேம்பாட்டு (HRD) முயற்சிகளில் மூலோபாய ரீதியாக முதலீடு செய்யும் நிறுவனங்களை முன்னிலைப்படுத்துகின்றன.
தங்க விருதைப் பெறுவதானது அதன் ஊழியர்களின் திறமைகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் NDB மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க பணிக்கு ஒரு சான்றாகின்றது. NDB யைப் பொறுத்தமட்டில், மக்களில் முதலிடுவது என்பது எதிர்காலத்தின் மீது முதலீடுவது ஆகும். குழு உறுப்பினர்களின் மேம்பாடு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், வங்கி அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் பங்களிப்பினை வழங்குகிறது. மனிதவள அபிவிருத்தி முயற்சிகள் தொடர்ச்சியான கற்றல் மற்றும் அபிவிருத்தி கலாசாரத்தை வளர்க்கின்றன.