இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்தபோது மக்கள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் சிரமங்களையும் சிலர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. சிலர் தங்கள் வலிமையான எதிரியைத் தோற்கடித்து, பொய்யையும், வெறுப்பையும், துவேஷத்தையும் பரப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள். எனவே இக்காலத்தில் சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான பல செய்திகள், அறிக்கைகள், பதிவுகள் உண்மை நிலையை சிதைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு, அதன் மூலம் நாட்டின் அரசியல் சித்தாந்தங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஊடகங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை புரியவைக்கும் நிகழ்வாக “ஆரஞ்சிய சுபை” (நற் செய்தி) எனும் தலைப்பிலான சுவரொட்டி வெளியிடப்பட்டதை குறிப்பிடலாம்.
பிரபலமான “யார் இவர் என்ன செய்கிறார்” என்ற சுவரொட்டியை விட இந்த சுவரொட்டி மக்களை கவர்ந்ததாக சில ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர். இவர் யார் என்ன செய்கிறார் என்பது சுவரொட்டியாக மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் “ஆரஞ்சிய சுபை” ஒரு சுவரொட்டியாக மட்டுமல்ல, அதேபோல் சமூக ஊடக வலைப்பின்னல்களில் பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட இடுகையாகவும் மாறியுள்ளது. இன்று, அந்த சுவரொட்டி பலரிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிட்டது. “ஆரஞ்சிய சுபை” என்பது இப்போது சமூக வலைதளங்களில் புதிதாக எதையும் குறிப்பிடும் போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இது சில விளம்பரங்கள் மற்றும் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு எவ்வாறு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்பதை நாட்டுக்கு அறிவிக்க மிகவும் ஆக்கபூர்வமான வழி பயன்படுத்தப்பட்டது.
இதன் மூலம் உடனடியாக முழு நாட்டின் கவனத்தையும் ஈர்க்க முடிந்தது.பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் சந்தித்த கடுமையான அனுபவங்களை சிலர் மறந்துவிட்டார்கள் என்று சமீபத்தில் சுட்டிக் காட்டப்பட்டது, ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, அந்த நினைவுகளை எளிதில் மறக்க முடியாது. நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவருவதை அறிந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்து நற்செய்தியை வரவேற்றனர். அன்றைய தினம் நாட்டின் எல்லாத் திசைகளிலிருந்தும் ஏற்றப்பட்ட ஒளி மகிழ்ச்சியான மக்களின் அடையாளமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூன் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையானது நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மக்கள் நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
கனவுகளை நிறைவேற்ற முடியாத நாட்டில் இருப்பதாக நினைக்கும் மக்களுக்கும், எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க முடியாது என்று நினைக்கும் மக்களுக்கும் அப் பேச்சு வித்தியாசமான சூழலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நாட்டின் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நாடு வெற்றிக்கொள்ளக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாகவும் அந்த உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க. இந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்தார். நாட்டை கட்டியெழுப்பிய விதம் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், “அதிகாரம் கேட்டு இலங்கை முழுவதும் அலைகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்று அதிகாரத்தைக் கேட்கிறார்கள். உலகம் முழுவதும் பயணம் செய்து அதிகாரத்தைக் கேட்கிறார்கள். அதிகாரத்திற்காக இரவு பகலாக பாடுபடுகிறார்கள்.
நான் நாட்டுக்காக இரவு பகலாக உழைக்கிறேன். இலங்கை முழுவதும் சென்று மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறேன். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நான் உலகம் முழுவதும் சென்று நமது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச ஆதரவைப் பெற உழைக்கிறேன்”.அப்போது அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, அதை முடிவு செய்யும் பொறுப்பை பொதுமக்களிடம் ஒப்படைத்தார். “என்னுடன் இணைந்து பிரச்சினையை ஆரம்பத்திலிருந்தே புரிந்து கொண்டு அதற்கான நடைமுறைத் தீர்வுகளை அளித்து முடிவுகளை காட்டி நாட்டை முன்னேற்றுவீர்களா?” அல்லது இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத இருட்டில் துழாவிக் கொண்டிருப்போருடன் இணையப் போகிறீர்களா? ஜனாதிபதி வேட்பாளர் தாம் என அறிவித்து, அதிகாரம் கோரி இலங்கை முழுவதும் அலையும்போது, நாட்டைக் காப்பாற்ற தான் பாடுட்டதாக அறிவித்த ஜனாதிபதி, தனக்கும் அவர்களுக்கும் இடையில் தெரிவுக்கு இடம் இருப்பதாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பு வரை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கவோ, அதற்கான பிரசாரத்தை தொடங்கவோ அவர் தயாராக இல்லை. மரதனில், முதலில், வேகமாக ஓடுவதால் எந்தப் பலனும் இல்லை. மற்ற வேட்பாளர்கள் முன்னோக்கி குதித்து தங்கள் ஆற்றலை சோர்வடையச் செய்யும் போது பந்தயத்தின் முடிவில் அதிகபட்ச ஆற்றலைச் செலுத்துவது அவரது உத்தியாகத் தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்கும் வரை பெற்ற அனுபவத்தில் இருந்து முதிர்ச்சியடைந்துள்ள அவருக்கு வெற்றி, தோல்வி அனுபவம் உண்டு. அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ஒரு சுவரொட்டியுடன் ஆரம்பித்தது போல் தெரிகிறது, அது நாடு முழுவதும் பரவி வருகிறது.
அந்த சுவரொட்டியை வெளியிட்டு, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையின் பின்னர், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று இப்போது யாரும் கூறமாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சிலர் கூறிவந்த அனைத்துக் கூற்றுகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற அனைத்துக் கட்சிகளின் பிரசாரங்களையும் நொடிப்பொழுதில் ஒரே சுவரொட்டியால் அடக்கி, அந்தப் பிரசாரங்கள் அனைத்தும் தனது சொந்தப் பிரசாரத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் நிலையை உருவாக்கி இருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க ஜூன் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி ஒரு பெரிய ஏமாற்று வேலை செய்யப் போவதாக ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் பெரும் குரல் எழுப்பினர். கடன் மறுசீரமைப்பு குறித்து தாங்கள் கூறப் போவது மக்களை ஏமாற்றும் நோக்கில் அமைந்த பொய்ப் பிரச்சாரம் என்று அந்தக் கட்சிகள் அறிவித்தன. இருந்தபோதிலும், ஜனாதிபதியின் அறிக்கைக்கு முன்னும் பின்னும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தலைவர் ஆகியோரின் அறிக்கைகள் உண்மையான நிலைமையை உறுதிப்படுத்தின. இலங்கையின் வெற்றிக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்தியா ஒரு விரிவான வாழ்த்து அனுப்பியதுடன், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததைப் போலவே இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்ததுடன், கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்ததற்கு பாராட்டு தெரிவித்தது.
இதேவேளை, ஜப்பானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இலங்கையில் கடன் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த முடிந்ததன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தலைவர் பீட்டர் ப்ரூவர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
வெற்றிகரமான வகையில் இதுபோன்ற வலுவான அறிக்கைகளால், எதிர்க்கட்சிகள் கூறும் ஏமாற்று வேலை இதுவல்ல என்பது தெளிவாகியது.
ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதால், ஜனாதிபதி போட்டியில் ரணிலும் பயணிப்பதால் ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிப்பதே மிக முக்கியமான விடயமாக நான் பார்க்கிறேன். ஒன்று ரணிலின் பிரகடனத்தின் பின்னர் ஏனைய இரண்டு கட்சிகளும் பெரும் பீதியுடன் பெரும் குழப்பத்துடன் செயற்பட்ட விதம். ரணில் விக்கிரமசிங்கவின் சுவரொட்டி மற்றும் தேசத்திற்கு உரையாற்றியமைக்கு எதிராக ஏனைய விடயங்கள் அனைத்தையும் மறந்து பெரும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதை பொதுமக்கள் அவதானிக்க முடிந்ததாக நான் கருதுகின்றேன்.
மற்றொன்று, நாட்டின் அரசியல் ஒரு நொடிப்பொழுதில் முற்றாக தலைகீழாக மாறியதையும், அரசியல் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
பெரும்பாலும் இது சமூக ஊடகங்களில் பிரதிபலிக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் நடத்தப்பட்ட முன்னாள் பிரதான வேட்பாளர்கள் இருவரின் பிரசாரங்களும் பெரும் பின்னடைவையும் சரிவையும் சந்தித்ததாகவே தோன்றுகிறது.
மேலும், மேடைகளில் அல்லது பிற சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட அறிக்கைகளிலிருந்த உயிரோட்டம் தற்போது இல்லாதிருப்பதையும் தற்போது காணக்கூடியதாக உள்ளது.
சுனந்த மத்துமபண்டார. களனி பல்கலைக்கழக பொருளியல்பீட முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்