இந்திய பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி 03 ஆவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவம் இன்று (09) நடைபெறவுள்ளது. பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுடன் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல்நாடுகள் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சீசெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை ஏற்றுக் கொண்டுள்ளனர். பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் தலைவர்கள், இன்றைய தினம் மாலை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்முவினால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்துக்கான பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக தலைவர்கள் வருகை தருகின்றமை, இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாக் கோட்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவால் வழங்கப்படும் உயர் முன்னுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.