இலங்கையில் முதன்மையான இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனை மின் உபகரணங்களை வழங்கிவரும் சிங்ககிரி தனியார் நிறுவனம் தமது ஆன்லைன் விற்பனை நிலையமான www.singhagiri.lk என்ற இணையவழி ஷொப்பிங் தளத்தை பயன்படுத்துபவர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய தோற்றத்தில் மீள் ஆரம்பம் செய்துள்ளது.
www.singhagiri.lk என்ற இணையத்தளம் 10 வருடங்களுக்கும் மேலாக ஆன்லைன் ஊடகத்தின் மூலம் நம்பகமான முறையில் கொடுக்கல் வாங்கல் சலுகைகளை மிகவும் வெற்றிகரமான முறையில் மேற்கொண்டு வருகிறது. உயர் தரத்தில் உலகின் முன்னணி உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் காட்சியறை வலையமைப்பு மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவை வலையமைப்பையும் சிங்ககிரி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நாமங்களில் 1000இற்கும் அதிகமான இலெக்ட்ரிக் தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள www.singhagiri.lk இணைய விற்பனை நிலையத்திற்கு எந்தவொரு இணைய சாதனத்தின் ஊடாகவும் இலகுவாக இணைந்திட முடியும். மேலும், தேவையான செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ளும் திறன் இதில் உள்ளது. டிஜிட்டல் தளத்தின் மூலம் தேவையான வேலைகளை மிகவும் இலகுவாகவும், விரைவாகவும் செய்யும் திறன் உள்ளது.