சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் துறையில் டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுகளுக்கு அதிகரித்துவருகின்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தனது பிரத்தியேக தீர்வை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சம்பத் வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையில் சாதனத்தை அறிமுகப்படுத்தும் முதலாவது வங்கியாக சம்பத் வங்கி மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வணிகங்கள் தமது பரிவர்த்தனைகளை சீரமைத்து, வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கு அவற்றுக்கு வலுவூட்டுவதற்காக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் தனித்துவமான தேவைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இப்புத்தாக்கமான கட்டமைப்பு வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் முக்கியமான வகிப்பாகம் சந்தையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் நிலையில், மலிவான மற்றும் பாவனைக்கு இலகுவான கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சம்பத் வங்கி இனங்கண்டுள்ளது. இலகுவாக கொண்டு செல்லக்கூடிய மற்றும் பல்வகைத் தொழிற்பாட்டுத்திறன் ஆகியவற்றுடன் இலகுவான பாவனையை சிந்தனையில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சாதனங்கள், வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் இலகுவான வழிமுறையை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வழங்கி, அதன் மூலமாக விற்பனை மற்றும் வருமான வளர்ச்சியை முன்னெடுக்கச் செய்கின்றன.