புதிய விளையாட்டு திறமைகளை வளர்க்கும் மற்றும் எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில், இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, டயலொக் பாடசாலை றக்பி லீக் 2024 ஐ மீண்டும் முன்னெடுக்கின்றது.
மொத்தம் 84 பாடசாலை அணிகள் மூன்று பிரிவுகளில் போட்டியிட உள்ளன, இது பாடசாலை றக்பி லீக் வரலாற்றில் புதிய மைல்கல்லாகும். கடந்த சில ஆண்டுகளில் டயலொக் தொடர்ந்து வழங்கிய ஆதரவின் விளைவாக இம்முறை அதிகமான பாடசாலைகள் பங்கேற்கின்றன. அதில் அபிவிருத்தி சுற்றுப்போட்டிகள் போன்ற முன்னெடுப்புகளும் அடங்கும். பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பருவம் ஜூன் 14 ஆம் திகதி ஹவ்லொக் மைதானத்தில் பிரிவு 1 பகுதி A மோதலுடன் ஆரம்பமாகும்.
டயலொக் பாடசாலை றக்பி லீக் 2024 இல் பிரிவு 1 குழு A பட்டத்தை வெல்ல 16 பாடசாலைகள் மோதுகின்றன. இதில் நடப்பு வெற்றியாளரான புனித பீட்டர்ஸ் கல்லூரி, கடந்த ஆண்டின் இரண்டாம் இடம் பெற்ற றோயல் கல்லூரியும் இடம்பெறுகின்றன.