இந்தியாவின் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பத்தால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதேவேளை பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 16 பேர் வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் வெப்பம் காரணமாக அனைத்து பாடசாலைகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முன்பள்ளிபாடசாலைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.