யாரையும் நீ
நம்பியிராதே
உன்னையே நீ நம்பு
நீ நெருப்பாயிரு
உன்னை எதிர்க்கும்
தீய சக்திகள்
உன்னைத் தீண்டினால்
அவை எரிந்து சாம்பலாகும்
நீ சிங்கம் போலிரு
யாருக்கும் எப்போதும்
அடிமையாயிருக்க
தேவையில்லை
எதைப்பற்றியும்
கவலைப்படாதே
கற்ற கல்வியும்
உன் திறமையும்
கடைசிவரை
கைகொடுக்கும்
தாகமாயிருக்கும்
போது மட்டும்
நீர் அருந்து
பசிக்கும் போது மட்டும்
உணவு உட்கொள்
ஓய்வு நேரங்களில்
ஓடியாடி விளையாடு
அவை உன்
ஆரோக்கியத்திற்கு நலன்
நல்ல இசையையும்
நல்ல பாடல்களையும் கேள்
அவையும் உன்
ஆத்மாவை ஆனந்தப் படுத்தும்
நல்ல புத்தகங்களை வாசி
அவையும் உமக்கு நலன்
உன்னையே நீ செதுக்கு
யாரிலும் தங்கியிராதே
யாரையும் நம்பியிராதே
உன்னையே நீ செதுக்கு
20
previous post