இலங்கை – ஏப்ரல் 2024 புகழ்பெற்ற பீட்சா விநியோகச் சங்கிலியான Domino’s Sri Lanka, இலங்கையின் மிகவும் விரும்பப்படும் உணவு மற்றும் பொருட்களை விநியோகிக்கும் தளமான Uber Eats உடனான தனது அற்புதமான புதிய கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
இந்த கூட்டாண்மையானது இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் Domino’s சிறந்த சுவையான பீட்சாக்களுக்கு இன்னும் வசதியான அணுகலை வழங்குகிறது.
கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பீட்சாக்களை Domino’s இன் விரிவான மெனுவிலிருந்து, Uber Eats ஆப்ஸ் மூலம் தங்கள் வீட்டிற்கு இலகுவாக ஆர்டர் செய்ய முடியும். Uber Eats இன் பரந்த விநியோக வலையமைப்புடன், Domino’s இன் சிறந்த சலுகைகள் பீட்சா பிரியர்களுக்கு எளிதான மற்றும் மகிழ்ச்சியான உணவு அனுபவத்தை உறுதி செய்கின்றன.
Donimo’s Sir Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரி இரங்க தர்மரத்ன, இந்த கூட்டாண்மை குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.