பஞ்சுமிட்டாய் தயாரிக்கப் பயன்படும் அரைக்கும் இயந்திரம், உருவாக்க உதவியாக இருந்தது ஒரு பல் வைத்தியராவார். 1897ஆம் ஆண்டு William Morrison என்ற பல் வைத்தியரும் John C. Wharton என்ற மிட்டாய் தயாரிப்பாளரும் ஒன்றாக இணைந்து மின்சாரத்தால் இயங்கும் பஞ்சுமிட்டாய் இயந்திரத்தை கண்டுபிடித்தனர்.
அப்போது நடைபெற்ற கண்காட்சியில் 1904ஆம் ஆண்டு இந்த இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன.
இதேவேளை, Josef Lascaux என்ற மற்றொரு பல் வைத்தியரும் இந்த மாதிரி ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். ஆனால் அவர் பொதுமக்களிடம் இதை அறிமுகப்படுத்தாமல் தன் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு மட்டும் செய்து கொடுத்தார்.
அவர் பொதுமக்களிடையே இந்த இயந்திரத்தையும் மிட்டாயையும் அறிமுகப்படுத்தாததற்கான காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை.
பஞ்சுமிட்டாய்க்கு Cotton Candy என்ற பெயரை வைத்தது இந்த வைத்தியர் தான்.
முன்னிருவர்களும் இதற்கு வைத்த பெயர் Fairy.