Home » வரலாற்றிலேயே அதிகூடிய தொகையை வரிக்கு முந்திய இலாபமாக பெற்றுள்ள ஜனசக்தி லைஃப்

வரலாற்றிலேயே அதிகூடிய தொகையை வரிக்கு முந்திய இலாபமாக பெற்றுள்ள ஜனசக்தி லைஃப்

by Damith Pushpika
May 12, 2024 6:18 am 0 comment

இலங்கையின் முன்னணி ஆயுட் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான ஜனசக்தி லைஃப், 2023ஆம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வரிக்கு முந்திய இலாபமாக 5.2 பில்லியன் ரூபாயைப் பெற்ற நிறுவனம், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்குப் பிந்திய இலாபத்திலும் மகத்தான 201% வளர்ச்சியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

இச் சாதனை, ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஆகக்கூடிய இலாபமாகும். இது, நிறுவனத்தின் வலுவான நிதி ஆரோக்கியத்தையும் சவால்கள் நிறைந்த சந்தையினுடாக தன்னை வழிநடத்துவதில் அதன் மூலோபாயத் திறனையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

272% என்ற மூலதனப் போதுமை விகிதம், 3.9 மடங்கு என்ற திரவத்தன்மை விகிதம் 27% என்ற பங்கு மூலதன வருமானம், பங்கொன்றிற்கு ரூ.18.25 என்ற பங்குச் சம்பாத்தியம் ரூ.3.4 பில்லியன் என்ற கோரிக்கை தீர்ப்பனவுகள் போன்ற முக்கிய நிதிக் குறிகாட்டிகள் அனைத்துமே சகல பங்காளிகளினதும் கண்ணோட்டத்தில் மதிநுட்பமான நிதி முகாமைத்துவத்தை உறுதியாக எடுத்துக்காட்டுகின்றன.

ஜனசக்தி லைஃப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி . ரவி லியனகே கருத்து வெளியிடுகையில், “சந்தை இடர்களை முகாமைத்துவம் செய்வதில், குறிப்பாக வட்டி வீத ஏற்றத்தாழ்வுகளை எதிர்பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதில் நாம் கடைப்பிடித்த செயற்றிறன் வாய்ந்த அணுகுமுறையானது மீளாய்வுக்குரிய ஆண்டில் ஜனசக்தி லைஃபின் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த முக்கிய காரணிகளுள் ஒன்றாகும் ” என்று கூறினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division