53
ஈரைந்து மாதங்கள் என்னை
இன்னலுடன் வயிற்றில் சுமந்து
ஈன்றெடுத்தாய் என்னை
இவ்வுலகில் தாயே…!
என் கனவுகள் நனவாக
உன் இரவுகள் பகலாகின.
என் மகிழ்வுக்காய் உன் இன்பங்கள்
துன்பங்களாக உரு மாறின
வாழ்க்கையின் வசந்தத்தை
அன்பளிப்பாய் எனக்கு
அளித்தாய்.
வாழ்க்கையின் யதார்த்தத்தை
படிப்படியாக உணர வைத்தாய்.
சில காலங்கள் உன் மடியில்
சிறகடித்தேன் சிறு வயதில்
உன் குரல் கேட்காத நேரமில்லை.
உன் கைப்படாத உணவில்லை
உன் வதனம் காணாத நாளில்லை.
படிக்கும் போதும் உன் வதனம் கண்டேன்
தூங்கும் போதும் உன் வதனம் காண்பேன்
ஆனால் இன்று உன்னை பிரிந்து
விடுதியில் தவிக்கிறேன்.
உன் வதனம் காண
ஆவலாய் துடிக்கிறேன்.