சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தொடர்பாக நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நாளை திங்கட்கிழமை காலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டிரான் அலஸ் நாடு திரும்பியவுடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்ததையடுத்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.