நடிகை ரம்யா பாண்டியன் பார்வையால் கொல்லும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியாக உள்ளனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் என்பதும் இந்த இரு நிகழ்ச்சிகளால் பிரபலமான அவர் சில திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நிலையில் தனது ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள், சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் ரம்யா பாண்டியன் வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்த நிலையில் அந்த பதிவில் அவர் கூறிய வசனம் இதுதான்:
மெல்லிய சிமிட்டல்கள் போதும்
சிறுசிறு அசைவுகள் போதும்
இமை மூடி திறந்தால் போதும்
கண்பாவையின் விழி மொழியில்
ஆடிப்பாவை அசந்தே போகும்
மேலும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்கள் இரண்டால்’ என்ற பாடலின் பின்னணியில் ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள போஸ் பார்க்கும்போது கண்களாலேயே அவர் ரசிகர்களை கொல்லுகிறார் போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.