ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் சூழல் நட்பான சேவைகளையும், தீர்வுகளையும் வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் லுமாலா என அறியப்படும் சிட்டி சைக்கிள் இன்டர்ட்ரீஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட், விகாரமகாதேவி பூங்காவில் ஏப்ரல் 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ZeroPlastic முன்னெடுப்பு புத்தாண்டு நிகழ்வின் பிரதான அனுசரணையாளராகத் திகழ்ந்தது.
இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றிருந்ததுடன், இந்த ஆண்டின் தமிழ், சிங்கள புத்தாண்டை வரவேற்கும் வகையிலான கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர். நிகழ்வின் விசேட அம்சமாக, ஒற்றைப் பாவனை பிளாஸ்ரிக் பொருட்கள் எதுவும் இந்த நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஏனையவர்களுக்கு முன்மாதிரியான செயற்பாடாக இது அமைந்திருந்தது. சூழல் நிலைபேறாண்மைக்கான திரண்ட அர்ப்பணிப்புடன், இந்த நிகழ்வின் போது, பாரம்பரியம் மற்றும் சூழல்-அக்கறை ஆகியன இணைந்ததாக கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.
ஏனைய வைபவங்களுக்கும் முன்மாதிரியானதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
பாரம்பரிய விளையாட்டுகள் முதல் கலாசார செயற்பாடுகள் வரை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒவ்வொரு அம்சமும் நிலைபேறாண்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. திரண்ட முயற்சிகளினூடாக, லுமாலா மற்றும் ZeroPlastic முன்னெடுப்பு இணைந்து, கொண்டாட்ட வைபவங்கள், புவிக்கு நட்பான வகையில் முன்னெடுக்கப்படக்கூடியதை வெளிப்படுத்தியிருந்தன.