ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் நாளை (22) நுவரெலியாவில் திறக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜீ.பிரதீப் சப்புதந்திரி தெரிவித்தார்.
இதுவரைகாலமும் ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் கண்டியில் சிறிய அலுவலகமாக இயங்கி வந்தது.
இந்த அலுவலகம் நுவரெலியா நகரில் இலக்கம் 95/26 A, லேடி மெகலம் வீதி, ஹாலிஎல என்ற புதிய விலாசத்திலுள்ள கட்டடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இங்கு சாதாரண சேவையூடாக தேசிய அடையான அட்டைகளை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெகு விரைவில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் விதத்தில் நுவரெலியாவில் இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது. வடமாகாணத்தை உள்ளடக்கும் விதத்தில் வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கும் விதத்தில் மட்டக்களப்பிலும் தென் மாகாணத்தை உள்ளடக்கும் விதத்தில் காலியிலும் ஆட்பதிவு திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. பிரதான அலுவலகத்தை தவிர காலியிலுள்ள ஆட்பதிவு திணைக்கள அலுவலகத்தில் மட்டுமே சாதாரண சேவையுடன் ஒருநாள் சேவையில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும், ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.