திறமைமிக்கவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கும் LACSDO MEDIA NETWORK SRI LANKA வின் விருது விழாவும் ஊடகச் செயலமர்வும் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை, புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளன. காலை 09.00 மணிக்கு ஊடகச் செயலமர்வு ஆரம்பமாகி பி.ப 1.00 மணிவரை நடைபெறும். விருது வழங்கும் நிகழ்வு பி.ப 04.00 மணிக்கு நடைபெறும்.
இவ் விழாவுக்கு தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளும் கெபிட்டல் வானொலி மற்றும் கெபிட்டல் தொலைக்காட்சியும் ஊடக அனுசரணை வழங்கவுள்ளன.
LACSDO MEDIA தலைவர் கலாநிதி ஏ.எல். அன்சார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் கலந்து கொள்ளவுள்ளார். புத்தளம் முன்னாள் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக், ஜக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி ஜூவைரியா மொஹிடீன், டொக்டர் றியாஸ் சுலைமான் லெப்பை, எம்.ஆர்.எப் றியாசா, வை.எம். சப்ராஸ், எம்.எப். பாத்திமா ஹசித்தா, புத்தளம் முன்னாள் நகர சபை உறுப்பினர் பிஸ்லியா பூட்டோ ஆகியோருடன் மேலும் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்
காலை நடைபெறும் ஊடகச் செயலமர்வில் கெபிட்டல் ஊடக நிறுவனத்தின் பொது முகாமையாளர் எம்.எப். சியால்ஹூல் ஹசன், ஜ.ரீ.என். ஊடக நிறுவனத்தின் வசந்தம் தமிழ் தொலைக்காட்சியின் தலைமை முகாமையாளர் இர்பான் மொஹமட், ஊடக வளவாளர் எம். றிசாத் சரிப், லக்ஸ்டோ ஊடக நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.ஆர். அன்ஸார், ஊடகவியலாளர் அஷ்ரப்.ஏ. சமத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்வார்கள். ஏற்கனவே இந் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஊடகப் பயிற்சியும் விருது வழங்கும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணத்திலும் கொழும்பிலும் நடைபெற்றுள்ளன.
அஷ்ரப் ஏ சமத்