62
மனை சுற்றி திரிய
மனம் கொத்தி போவாய்
பெறுக மானிடர்
அழிக்க உன் குடில்
மறைந்து போகிறாய்
–
அழகு சிட்டே!
அழகுக்கு எளிமை நீயாய்
அன்புக்கும் இலக்கணம் சொல்வாய்
அரிதாய் போனாய்
குயிலல்ல நீ
மறைந்து பாடி மனம் ஈர்க்க
எனை சுற்றி கீச்சிட
கெஞ்சும் உன் இணையோடு பார்த்திட
உனையும் கொஞ்சிடும்
உன் குஞ்சும் அன்னையோடு கீச்சிட
இதமாகும் இதயம் அங்கே
குத்தகைக்கு உன் மொத்தம் எடுத்தது பாரும்
குடியமர குடிலில் ஓரிடம் தந்தேன்
குடிக்க நீருடன் பாத்திரம் வைத்தேன்
வஞ்சம் கொண்ட நெஞ்சம்
சிட்டே நாளைக்கு
நானும் உன்னிடம் பட்டே…