Home » இந்திய இலங்கை மீன்பிடி பிரச்சினைக்கான நிலையான தீர்வு?

இந்திய இலங்கை மீன்பிடி பிரச்சினைக்கான நிலையான தீர்வு?

by Damith Pushpika
April 7, 2024 6:07 am 0 comment

கடந்த வாரத் தொடர்

இதற்கிடையில், இரண்டு ஒப்பந்தங்களின்படி, இலங்கை மீனவர்கள் தமக்கு தவிர்க்கப்பட்ட பகுதிக்கு செல்வதைத் தவிர்த்தனர்.

வடமேற்கில் சிலாபத்திலிருந்து கிழக்கில் முல்லைத்தீவு வரையிலான பரந்த வளைவில் தமிழ்நாட்டு இழுவை படகுகள் கைப்பற்றப்பட்ட போது, இந்திய மீனவர்களும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கச்சத்தீவு தீவை மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கடற்பரப்பில் உள்ள உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம், தமிழக மீனவர்களின் தொடர்ச்சியான ஊடுருவல்களாலும், இலங்கை அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

மாறாக, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகள், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு, அடிமடி இழுவை மீன்பிடித்தல் போன்ற அழிவுகரமான மீன்பிடி முறைகளிலிருந்து மீன் வளங்களைப் பாதுகாப்பதன் மூலம், குறைந்த எண்ணிக்கையிலான இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்தாலும், ரோந்து மற்றும் தடுப்புக்காவல்களை அதிகரிக்க வழிவகுத்தது.

இந்திய மீனவர்களின் “பாரம்பரிய” மீன்பிடி உரிமைக்கான கோரிக்கைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முயற்சிகளுக்கும் இடையிலான இந்த மோதல் சர்ச்சையை சிக்கலாக்குகிறது.

இந்திய -இலங்கை மீன்பிடித் தகராறுக்கான தீர்வு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, நிலையான மீன்பிடித்தல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் எல்லைகளை கடைப்பிடித்தல் என்பவற்றை உள்ளடக்கியது.

இழுவை படகுகளின் உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை,ஒத்துழைப்பு மற்றும் அவர்களுக்ெகதிரான எதிரான தண்டனைக்குரிய நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறைக்கு இது அழைப்பு விடுக்கிறது.

கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் அடிமடி இழுவை அழிவுகரமான மீன்பிடி முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கு நிலையான மீன்பிடி நடைமுறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பல்லுயிர் பாதுகாப்பிற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலதிகமாக, நிறுவப்பட்ட கடல் எல்லைகளை மதிப்பது ஒவ்வொரு நாட்டினதும் பிராந்திய கடல்களுக்குள் மீன்பிடி நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் முக்கியமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்வாழ்வாதார நிலைத்தன்மையை அது உறுதி செய்கிறது.

பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் சட்டவிரோதமாக கடத்தல், உரிமம் இன்றிய மீன்பிடி மற்றும் இலங்கையில் சட்டங்களால் தடைசெய்யப்பட்ட அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு உடனடி தீர்வு காண இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு அவசியம்.

மேலும் கடலில் வரையறுக்கப்பட்ட வளங்களின் மீதான அழுத்தத்தை குறைக்க 2000 இழுவை படகுகளை மூன்று ஆண்டுகளுக்குள் அகற்ற 2017 இல் தொடங்கப்பட்ட திட்டத்தின் தோல்வியை இந்தியா நிவர்த்தி செய்ய வேண்டும். ஒரு விரிவான மற்றும் கூட்டு அணுகுமுறையானது, உடனடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, கடற் சூழலின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிசெய்து, அதைச் சார்ந்திருக்கும் சமூகங்கள் தப்பிப்பிழைப்பதை உறுதி செய்கிறது.

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவது, அவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள், மற்றும் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் பிரச்சினைகள் ஆகியவை மீன்பிடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் தவிர்க்கப்படக் கூடாது.

ரசங்கா குமாரிஹாமி ஆராய்ச்சியாளர் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division