Home » மூன்று Radisson ஹோட்டல்களுக்கான Cluster பொது முகாமையாளராக கிறிஸ்டொபர்குவாட்ரோஸ்

மூன்று Radisson ஹோட்டல்களுக்கான Cluster பொது முகாமையாளராக கிறிஸ்டொபர்குவாட்ரோஸ்

by Damith Pushpika
April 7, 2024 6:43 am 0 comment

Radisson Hotels Sri Lanka ஹோட்டலின் முகாமைத்துவ நிறுவனமான La Vie Hotels & Resorts உடன் இணைந்து இலங்கையிலுள்ள மூன்று மதிப்புமிக்க Radisson ஹோட்டல்களுக்கு Cluster பொதுமுகாமையாளராக கிறிஸ்டொபர் குவாட்ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Radisson Hotel Colombo, Radisson Hotel Kandy மற்றும் Radisson Blu Resort Galle ஆகியவற்றுக்கு 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சர்வதேச முகாமைத்துவம் மற்றும் விருந்தோம்பல் அனுபவம் கொண்ட கிறிஸ்டொபர் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் துறைக்கு சிறந்த சேவையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Park Hyatt Maldivesஇன் பொதுமுகாமையாளராக அண்மையில் பணியாற்றிய கிறிஸ்டோபர், ஹோட்டலுக்கு வருகைதரும் விருந்தினர் திருப்தி மற்றும் செயல்பாட்டுத் திறனில் சிறந்து விளங்கும் புதிய தரநிலைகளுக்கு ஹோட்டலை வழிநடத்தினார். அதற்கு முன்னர் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள JA Resorts & Hotels ஹோட்டல்களில் Cluster ஹோட்டல் முகாமையாளராக பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையின் அடிப்படையில் சொத்துக்களை அவர் சிறப்பாக வழிநடத்தி அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division