Home » விமான சேவையை ஆரம்பிக்க IndiGo இலங்கையிடம் அனுமதி கோருகிறது
சென்னை–யாழ். பலாலிக்கு இடையே

விமான சேவையை ஆரம்பிக்க IndiGo இலங்கையிடம் அனுமதி கோருகிறது

by Damith Pushpika
March 31, 2024 8:00 am 0 comment

இந்தியாவின் சென்னைக்கும் யாழ். பலாலிக்கும் இடையே விமானங்களை இயக்க இண்டிகோ எயார் லைன்ஸ், இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. கொவிட்-19 காலத்தில் யாழ். பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக்கு தடை ஏற்பட்டது.

இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்தவுடன் தனது விமான சேவையை நிவாரண விமான சேவையாக ஆரம்பிக்கப்படுமென IndiGo எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

IndiGo எயார் லைன்ஸ் தற்போது கட்டுநாயக்காவுக்கும் சென்னைக்கும் இடையில் விமானங்களை இயக்குகிறது.

எனினும், யாழ்.பலாலிக்கும் சென்னைக்கும் இடையே சேவையை ஆரம்பிக்குமாறே அதிகளவான கோரிக்கைள் இருப்பதாகவும், IndiGo நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division