56
வீசிடும்
தென்றலுடன்
பேசிடும் உன்னினைவு
காய்ந்திடும் நிலவுடன்
தேய்ந்திடும் என்னிளமை
உன் மடிசாய்ந்தே
கதைத்திட ஆயிரமிருக்கு
என் சோடியாகிட
அழைக்கிறேன் துயரமிழந்து
என்னை வாழவைக்கும்
உயிரும் நீயல்லவா..?
பூங்காற்றிலே உன்
சுவாசம் மேன்மையல்லவா..?
சிந்திடும் புன்னகையில்
துளிர்க்கிறேன் காதலனாய்
நீந்திடும் கனவில்
களிக்கிறேன்
ஆவலாய்
கைகோர்த்திடு
பெண்ணே
தொட்டிடுவோம்
விண்ணை
மையலாகிடு என்னில்
வென்றிடலாம் உலகை..!
ஏரூர் கவிமாமணி எம்.ரி.எம்.அன்ஸார்