Home » கொடூர ஆட்சி நடத்திய அரசிகள்

கொடூர ஆட்சி நடத்திய அரசிகள்

by Damith Pushpika
March 24, 2024 6:30 am 0 comment

ரணவலோனா

‘பைத்தியக்கார மற்றும் பித்துப் பிடித்த ராணி’ என்று அழைத்த அரசி ஒருவர், மடகஸ்காரில் 19ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தார். அவரை இவ்வாறு அழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவளது கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்று ஆட்சியில் அமர்ந்தாள்.

அதன்பின்னர் மடகஸ்காரில் 33 ஆண்டுகள் கொடூரமான முறையில் ஆட்சி செய்தாள். வரலாற்று ஆசிரியர்கள் இவளை ‘பெண் காலிகுலா’ என்று அழைக்கின்றனர். கிறிஸ்தவத்தை கைவிட மறுத்த அனைவரையும் மிருகத்தனமாக சித்திரவதை செய்தாள். மக்களின் உடல் அங்கங்களை துண்டித்தும், எரித்தும் மற்றும் குன்றில் இருந்து தள்ளியும் கொடூரமாக கொன்றாள். இவ்வாறு அவள் அந்தத் தீவில் பாதி மக்களைக் கொன்றதாகக் கூறப்படுகின்றது.

மடகஸ்காரை ஐரோப்பிய காலனித்துவத்தில் இருந்து விடுவிப்பதே அவளது நோக்கமாக இருந்தது. அவள் வெளிநாட்டினரை தீவில் இருந்து வெளியேற்றியதோடு அவள் கையெழுத்திட்ட அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் முறித்தாள். 1881இல் ரணவலோனா மரணமடைந்தாள்.

எலிச​ெபத் பாத்தரி

அனைவரும் அஞ்சி நடுங்கிய பெண் அரக்கியாக இவள் காணப்பட்டாள். இவள் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச வம்சத்தில் பிறந்த ஹங்கேரிய பெண்மணி. இவள் கொடூரமான சைக்கோ கொலைகாரி. இவள் இயல்பாகவே அரச குடும்பம் என்பதனால் அவளிடம் அதிகளவான அதிகாரமும் அடக்கு முறையும் காணப்பட்டது.

இவள் எத்தனை பேரைக் கொன்றால் என்பது இன்றும் அறியப்படவில்லை. தான் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம் பெண்களைக் கொன்று, அவர்களின் இரத்தத்தால் குளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். இவ்வாறு இவள் கொன்ற பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 650 ஆக இருக்கலாம் என கூறப்படுகின்றது. கடுமையாக அடித்தல், முகத்தை நசுக்கிக் கொல்லுதல், உடல் பாகங்களை சிதைத்தல் என பல பெண்களை கொடூரமாகக் கொன்றாள்.

இறுதியில் இவள் பல பிரபுக்களின் மகள்களைக் கடத்தி துன்புறுத்திக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு கோட்டையில் சிறை வைக்கப்பட்டு அங்கேயே இறந்தாள்.

கு. அவினாஷ்- வத்தளை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division