நான்கு ஆண்டுகளுக்குள் விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. இலங்கை தற்போது முழுமைப் படுத்தியுள்ள முன் நடவடிக்கைகளுள் 2023ஆம் ஆண்டு திட்ட அளவுகளுக்கு இணங்க நிதி ஒருங்கிணைப்பை ஆதரிப்பதற்கான, வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுதல், 2022ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுதல், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், மாதாந்தம் பெற்றோலிய விலைகளை மறுசீரமைத்தல் மற்றும் வருடத்துக்கு இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல் போன்றவற்றிற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுதல், புதிய மத்திய வங்கியின் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் மத்திய வங்கிக்குரிய, நெருக்கடி முகாமைத்துவச் செயற்பாடுகளின் பிரதான துறைகளை வலுப்படுத்தி, வங்கிச் சட்டத்தின் திருத்தத்திற்காக அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ளல், வங்கிக் கட்டமைப்பை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு ஒரு சுயாதீன அமைப்பை நியமித்தல் மற்றும் கொள்கை வட்டி விகிதத்தை 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிப்பதன் மூலம், அடிப்படைக் கொள்கை வட்டி விகிதங்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, திட்டத்துக்கு ஏற்ப 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்துக்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுதல், 2023ஆம் ஆண்டிற்கான வருமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்ற அனுமதியைப் பெறுதல் மற்றும் வங்கிகளுக்குப் பொருந்தக்கூடிய அவசரகால பணப்புழக்க ஆதரவுக் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய அடுத்த கட்ட முக்கியமான மூன்று செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அரச நிதி தொடர்பான பிரச்சினைகள், அரசுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்கள், சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தங்கள், நாணய மற்றும் மாற்று விகிதக் கொள்கைகள் மற்றும் அரச நிதித்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான பல கட்டமைப்பு நடவடிக்கைகளை இலங்கை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணித்தல்.போதியளவு செயல்திறன் அளவுகோல்கள் (QPCs), தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோல்கள் (CPC) நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன் பொறுப்புகள் மற்றும் ஐ.நா. விரிவான கடன் வசதி திட்டத்தின் செயல்திறன், நிதியின் பிரிவு VIII பயன்முறை அர்ப்பணிப்பு, குறிகாட்டி இலக்குகள் (ITகள்) மற்றும் பணக் கொள்கை ஆலோசனைப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான பொறிமுறையின் மூலம் முன்னேற்றம் கண்காணிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறல் கட்டமைப்பிற்கான சட்ட மாற்றங்கள்: முன்மொழியப்பட்ட மத்திய வங்கிச் சட்டம் போன்ற புதிய வங்கிச் சட்டம் மற்றும் தற்போதுள்ள சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் போன்றவற்றின் மூலம் நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்குரிய நிறுவன மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு சாசனத்திற்கு அமைய, தெற்காசியாவில் முதன்முறையாக புதிய ஊழல் தடுப்புச் சட்டம் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, அதன் மூலம் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவினை நிறுவுவதற்கு வசதியளிக்கின்றது. வரவு செலவுத் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அரச நிதி தொடர்பான பொறுப்புக்கூறல் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டம் இயற்றப்படும்.
சமூக பாதுகாப்பு வலையமைப்பை மறுசீரமைத்தல்: சமீபத்திய ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு வலையமைப்புகளுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்தபோதிலும், பயனாளிகளுக்கு நிவாரணமளித்தல் மற்றும் அவர்களைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான செயல்பாட்டினை மேம்படுத்துவதற்காக கணிசமான இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலையமைப்பினுள் காணப்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சமூக பாதுகாப்பு வலையமைப்பு வேலைத் திட்டங்களின் செயல்திறன், இலக்கு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு விரிவான கடன் வசதி திட்டத்தின் மூலம் சில நிறுவன சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்தியுள்ளது.
விலை ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துதல்: பொருத்தமான நாணயக் கொள்கை நடவடிக்கைகளின் ஊடாக நெகிழ்வான பணவீக்க இலக்குக் கட்டமைப்பின் கீழ் பணவீக்க இலக்கு இடைவெளியை நிலையான பணவீக்கமற்ற வழியின் ஊடாக மீண்டும் நிலைநிறுத்தி, விலை ஸ்திரத்தன்மையை மீண்டும் நிறுவுவதை மத்திய வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, அரச வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு மத்திய வங்கியின் மூலம் நிதியளிப்பானது படிப்படியாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை ஸ்திரத்தன்மையை உணர்ந்து கொள்வதற்கான அர்ப்பணிப்பில், மாற்று விகிதத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையைப் பேணுதல் மற்றும் எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் இருப்புக்களை மீண்டும் உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல்: இலங்கையின் நிதி கட்டமைப்பு அரச துறை மீது பெரிதும் வெளிப்பட்டிருப்பதாகவும், மூலதனமாக்கல் மத்திய நிலையமாக இருப்பதாகவும், கடன் மறுசீரமைப்பின் பின்னர் நிதிக் கட்டமைப்பு, மூலதனம் மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தாகும். இதனடிப்படையில், இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பின் விளைவாக வங்கிகள் குறிப்பிடத்தக்க மூலதனம் மற்றும் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது. எனவே, அரச வங்கிகளின் ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வலுப்படுத்துவதற்காக, சொத்துக்களின் தரத்தை மதிப்பாய்வு செய்தததன் பின்னர், கட்டுடைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளின் மூலதனத்தை மீள உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றது. இதேவேளை, இலங்கையின் நிதிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக நிதித்துறை மேற்பார்வை மற்றும் நெருக்கடி முகாமைத்துவ கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.இந்த விசேட நன்மைகளுக்கு மேலதிகமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கைளை வளர்த்தல், இறையாண்மை கடன் மதிப்பீட்டை உயர்த்துதல் மற்றும் சந்தையை நோக்கி மீள் பிரவேசத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தல் போன்றவற்றின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரிவான கடன் வசதித் திட்டங்கள் பொருளாதாரத்தில் மறைமுக, நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இலக்குகளின் சவாலான தன்மையைக் கருத்தில் கொண்டு, வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும் காலம் முழுவதும் அதை வெற்றிகரமாக முடிப்பதை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரிகள் அதிக அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதேபோன்று, முக்கியமாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்படக்கூடிய அதிருப்தி மற்றும் அதன் பிரதிபலனாக ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்பையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் காலத்தினுள் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, ஆரம்பகாலத்தில் செய்ய வேண்டிய அர்ப்பணிப்புக்களின் மூலம் நீண்டகாலப் பொருளாதாரப் பலன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய முறைகள் தொடர்பில் பொது மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
(இலங்கை மத்திய வங்கியின் 2022ம் ஆண்டறிக்கையிலிருந்து)