White Chocolate என்ற பெயரில் வருபவை ெசாக்ேலட்டுகளே அல்ல. சொக்ேலட்டில் டார்க், செமி ஸ்வீட், மில்க் என்று பல வகைகள் இருந்தாலும், வைட் சொக்லேட் அவற்றுடன் சேர்ந்ததல்ல. chocolate liquor and cocoa solids இவற்றின் அளவைக் கொண்டே சொக்ேலட்டுகள் டார்க், செமி ஸ்வீட் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
வைட் சொக்ேலட்டில் மேற்சொன்ன இரண்டு பொருட்களுமே இல்லை. இதனாலேயே வைட் ெசாக்ேலட், ெசாக்ேலட் வகைகளில் ஒன்றாக வருவதில்லை. ஆனால், வைட் சொக்ேலட்டில் Cocoa Butter சேர்க்கப்படுகிறது. சில கம்பெனிகள் cocoa butterக்கு மாற்றாக தாவர எண்ணெய் உபயோகிக்கின்றன. இதைத் தடுக்க 2004ஆம் ஆண்டு அமெரிக்காவில் வைட் சொக்லே என்ற பெயரில் வரும் உணவுப்பொருட்களில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 20% cocoa butter இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.