‘drosera genus’ என்ற தாவரங்கள் சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இந்த வகைத் தாவரங்கள் Sundews என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதிகள் பார்ப்பதற்கு நீர்த்துளிகளால் சூழப்பட்டு இருப்பதைப் போல காணப்படுவதாலேயே Sundews என்ற சிறப்புப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு நீர்த்துளிகள் போலிருந்தாலும், நிஜத்தில் இவை கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மை உடையன.
இந்த என்சைம்கள் அருகில் வரும் சிறு உயிரினங்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பதற்கு மட்டும் உதவுவதில்லை. அப்பூச்சிகள் தாவரத்தின் உணவான பிறகு அவற்றை செரிக்க வைக்கவும் உதவுகின்றன. சதுப்பு நிலக்காடுகளிலும் கடற்கரை ஓரங்களிலும் அதிகம் காணப்படும் இத்தாவரக் குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.