மாண்புமிகு நோன்பே
வருக வருக
மானிடம் செழித்திட
நன்மைகளைத் தருக
மாற்றம் காணவே
மனங்களில் நிறைக
மாசில்லா வாழ்வை
பாரினில் வரைக
ஐக்கியம் பெருகிட
நோன்பே வருக
ஐவேளைத் தொழுதிட(ப்)
பயிற்சியைத் தருக
ஐந்து கடமைகளில்
நோன்பும் ஒன்றே
ஐயம் களைதலே
நன்மைக்குச் சான்றே
இறைவனின் கட்டளையை
எடுத்தே வெல்வோம்
இன்பம் காணவே
சொர்க்கம் செல்வோம்
இல்லாதோரும் வாழவே
வாரி வழங்கிடுவோம்
இன்னல் நிலையில்லையென
நாமும் விளங்கிடுவோம்
அயலவரை மதித்தே
நாளும் வாழ்ந்திடுவோம்
அண்ணலாரின் வாழ்வை(ப்)
பின்பற்றியே உயர்ந்திடுவோம்
அனைவரும் சமமென
அகிலத்தை அணைத்திடுவோம்
அன்பைப் பகிர்ந்தே
புன்னகையில்
இணைந்திடுவோம்
வானை நோக்கியே
கைகளை உயர்த்துவோம்
வாசம் நிறைந்த
வாழ்வில் உயர்வோம்
வாடிவதங்கியே நன்மைக்கு
உரியவராய் மாறுவோம்
வாழ்வும் நிலையில்லையென
உணர்ந்தே தேறுவோம்
ஏழைகளின் வரியை
மறவாது கொடுப்போம்
ஏணியாய் மாறியே
அவர்களை உயர்த்துவோம்
ஏகனின் அச்சத்தால்
நாமும் வாழ்வோம்
ஏற்றம் பெற்றே
மறுமையில் வெல்வோம்..!