Home » பெண்களை வலுவூட்டும் இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் சமர்ப்பிப்பு
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும்

பெண்களை வலுவூட்டும் இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் சமர்ப்பிப்பு

by Damith Pushpika
March 10, 2024 6:30 am 0 comment

ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசியலமைப்பின்படி பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கும் வலுவூட்டலுக்குமான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் கடந்த 07ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும் ஆண், பெண் சமூக சமத்துவ சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு, செலவுத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது ஆசியாவிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு ஸ்தாபிக்கப்படும் எனவும், அதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

பெண்களின் உரிமைகள் பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாதென வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் அனைத்தையும் தேசிய பொறுப்பாக கருதி நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்கு தெளிவூட்டுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு அல்லாமல் இந்தச் சட்டங்கள் விதிமுறைகளை கொண்டு வருவது மாத்திரம் போதுமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார். தற்காலிக பெண்கள் பராமரிப்பு நிலையங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பெண்கள் பணி அமைப்புகள் மற்றும் பெண்கள் அதிகார சபைகளின் யாப்பு என்பன, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division