யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் பொதுமக்கள் சென்று வழிபட 34 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
அங்குள்ள ஆலயங்களில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வழிபட கட்டுப்பாடுகளுடன் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாக, யாழ். வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி சில ஆலயங்களுக்கு பொதுமக்களை இராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர். இதன் பின்னர் நேற்று முன்தினம் (01) கட்டுவன் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்துக்கு சுமார் 30 பேரை இராணுவத்தினர் தமது பஸ்களில் அழைத்துச் சென்றதுடன், அவ்வாலயங்களில் வழிபட அனுமதித்தனர்.
மீண்டும் தங்களை அவ்வாலயங்களிலிருந்து அழைத்துவந்து உயர் பாதுகாப்பு வலய எல்லையில் விட்டதாகவும், அம்மக்கள் தெரிவித்தனர்.
யாழ். விசேட நிருபர்