Home » உட்கட்சி பிரச்சினைக்கு மட்டும் நீதிமன்றை நாடுவது வேடிக்கை
நாட்டில் நீதி செத்துவிட்டதாக கூறியவர்கள்

உட்கட்சி பிரச்சினைக்கு மட்டும் நீதிமன்றை நாடுவது வேடிக்கை

தமிழ்க் கட்சிகளின் அரசியல் நாடகம்

by Damith Pushpika
March 3, 2024 7:45 am 0 comment

இலங்கையில் நீதி செத்துவிட்டதாகக் கூறி போராட்டம் நடத்தியவர்கள், இன்று தங்களது தேவைக்காக தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (02) அனுப்பி வைத்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தாவது, “இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு நீதியும் வழங்காது, தீர்வும் தராதெனக் கூறியவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லையெனக் கூறியவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப் போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதாக கூறி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை தேவையெனக் கூறியவர்கள், தமது உட்கட்சி விவகாரத்துக்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினையென்றால் அது தீரக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்துக்கும் போவோமென்பார்கள், தமது பிரச்சினையை இலகுவாக தீர்க்கும் விருப்புடன் இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது” என்றார்.

யாழ். விசேட நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division