Home » எனக்குத் துணையாய் இரு..

எனக்குத் துணையாய் இரு..

by Damith Pushpika
March 3, 2024 6:44 am 0 comment

எனக்குத் துணையாய் இரு..
மரணம் என்னை
அழைத்துச் செல்லும் வரை!!

கடல் அலைகள் கால்களைத்
தொட்டுச் செல்ல
அவளின் நினைவலைகளோ
இதயம் வரை
நனைத்துச் சென்றது!!
கவிதையும் சிவந்தது
வெட்கத்தில்
கவிதை மடலின்
காதல் வசனங்கள்
செந்நிறத்தில் மலர்ந்ததால்!!

திருப்தி என்ற
சொல்லுக்கு அர்த்தம்
தெரியவில்லை,
அவளுடனான
இதழ் முத்தம்
நீ..ண்..ண்..ண்..ட..
போதிலும்!!

அலைக்கழிக்கப்படும்
எதிர்பார்ப்புகள்
மரணத்தின் வலியை விட
கொடுமையானது
அதனால் தான் என்னவோ
தற்கொலையை கூட
விரும்பி விளையாட்டாய்
ஏற்றுக் கொண்டு விடுகிறது
பாழும் இதயம்!!

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division