141
செல்வோம் செல்வோம்
என்று வரும்
செல்வத்தைக் கண்டு
சிந்தை தடுமாறாதே மனிதா
அல்லலும் அதனாலே
அடுத்தடுத்து வரும்
அறிவிலே நீ கொள்ளு மனிதா!
தனம் இருக்கையில் தினமுன்
இருப்பிடம்
தேடி வருவாரே மனிதா
கனமுந்தன் வாழ்வில்
வெறுமை சூழ்கையில்
விட்டு விலகுவார் மனிதா!
குற்றம் பார்ப்பதும் குறை கூறுவதும்
குவலய மாந்தர் இயல்பு மனிதா
உற்றவராய் இருந்து உதவி புரிந்ததை
ஒரு கணம் எண்ணிடார் மனிதா!
உலகமதை நாடக அரங்கமாய் மாற்றி
உலவுவார் நடிகராய் மனிதா
பலதும் பத்தும் இப்பாரினில்
அரங்கேறும்
படிப்பினைக் கொள்ளடா மனிதா!