இவ்வாண்டு மகாசிவராத்திரி விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற ஆலயங்களில் நடைபெறும் ‘நாட்டியாஞ்சலி’ மகோற்சவத்தில் ‘கலாசூரி’, ‘ஆச்சார்ய கலாசாகர’ வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன அமைப்பில் நாட்டிய கலா மந்திர் நடனக் கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. புண்ணிய க்ஷேத்திரங்களான சிதம்பரம் நடராஜப் பெருமான் சந்நிதானம், வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி சந்நிதானம், கும்பகோணம் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் ஆலயம், திருப்பாலந்துறை ஸ்ரீ பாலைவனநாதர் ஆலயம், தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் நடைபெறும் நாட்டியாஞ்சலி வைபவங்களில் நாட்டிய கலா மந்திர் மாணவிகள் அபிராமி தில்லைநடராஜா, அம்றிதா கேதீஸ்வரன், நம்ருதா பிரபாகரன், சுவஸ்திகா சுவீந்திரன், ஹரித்ரா செந்தில்குமார், ஹம்ஷிதா பிரபாகரன், அஜிக்சா அஜித், அபிநேத்ரி கிரிசங்கர், குணவர்ஷிகா ஜெகநாதன், மஞ்சரி கிரிசங்கர் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
‘நாட்டிய கலா மந்திர்’ கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில்
59
previous post