Home » நாட்டின் சட்டத்தை மாற்றுவதற்கு What’s New உடன் இணையும் இளம் சட்டத்தரணிகள்

நாட்டின் சட்டத்தை மாற்றுவதற்கு What’s New உடன் இணையும் இளம் சட்டத்தரணிகள்

by Damith Pushpika
March 3, 2024 6:11 am 0 comment

நாட்டின் சட்டம் மாற்றப்பட வேண்டுமா? இந்த விடயம் களத்திற்கு வந்தது கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னராகும். 2022ஆம் ஆண்டில் இந்நாடு முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடி நிலையின் போது இலங்கைக்கான சிறந்த சட்டக் கட்டமைப்பின் அவசியம் வலுவாக உணரப்பட்டது. அதனால்தான் நாட்டின் தேவையை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் சட்டத்துறையை நவீனமயப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். இந்த முற்போக்கான மறுசீரமைப்பு முன்மொழிவுகளின் மூலம் மிக முக்கியமான சட்டத் துறைகள் பலவற்றில் மறுசீரமைப்புக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் வர்த்தக தாராளமயமாக்கல் தொடர்பான புதிய சட்டங்கள், பாலின சமத்துவம் குறித்த புதிய சட்டங்கள் மற்றும் குறிப்பாக பெண்களை வலுவூட்டுவதற்காக சமூகத்தில் பாரிய எதிர்ப்பார்ப்பாக இருந்த புதிய சட்டங்கள் இதில் உள்ளடங்கும். இந்தச் சட்ட மறுசீரமைப்புக்களின் முக்கியத்துவமும் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார அபிவிருத்தியின் பெறுமதியும் முழு தேசிய அரச கட்டமைப்பு முதல் தனிப்பட்ட குடிமகனுக்கும் பொருந்தும்.

எவ்வாறாயினும், 2048 இல் அபிவிருத்தியடைந்த நாட்டை நோக்கிப் பயணிப்பதற்கு, மேலும் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களின் மறுசீரமைப்பு அவசியம் என்பது தெளிவாகிறது.

புதிய சட்ட மறுசீரமைப்புக்களின் தேவை மற்றும் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினரின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட ஜனாதிபதிச் செயலகம், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் “What’s New” வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பது இந்நாட்டின் சட்டத் துறையில் மறுசீரமைப்புக்களைக் கொண்டு வருவது தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கேயாகும். எதிர்கால சட்ட மறுசீரமைப்புக்களுக்காக தீவிரமான பங்களிப்புக்களை வழங்குவதற்கு இளம் சட்டத்தரணிகளுக்கும், இளம் சட்ட வல்லுனர்களுக்கும் மற்றும் சட்டத்துறை மாணவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்கு இந்த திட்டம் எதிர்பார்க்கின்றது. இந்த நாட்டில் தற்போதுள்ள சட்ட அமைப்பினுள் காணப்படும் இடைவெளிகளை கண்டறிவதற்கும், அதற்குப் பொருத்தமான தீர்வுகளை முன்வைப்பதற்கும் “What’s New” வேலைத்திட்டம் இளம் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. நாடு முழுவதும் பரந்திருக்கும் திறமையான சட்டத் துறை சார்ந்தவர்களின் எதிர்கால நோக்கினை முன்வைப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கும், அதன் ஊடாக இந்த நாட்டின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இளைஞர்களுக்கு பங்களிப்பை வழங்குவதற்கு இடமளிப்பதும் “What’s New” வேலைத்திட்டத்தின் நோக்காகும்.

நாட்டின் சட்டங்களை மாற்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இளம் சட்டத்தரணிகள் குழுவினர் கொழும்பை நோக்கிப் படையெடுக்கின்றனர். அவர்கள் அதற்காக இளைஞர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சமூக வலைதளங்கள் மூலம் பெற திட்டமிட்டுள்ளனர். இளைஞர்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான சமூக ஊடகத் தளம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division