மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளம் ஜோடிகளாக நடித்த நட்சத்திரங்கள் ஒரு படத்தில் நாயகன், நாயகி ஆக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
’12பி’ ‘உன்னாலே உன்னாலே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவாவின் மகள் சனா ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பு தயாரிக்க உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் இந்த படத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சிறு வயது ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த சந்தோஷ் என்பவரும் அதே போல் சிறுவயது நந்தினி கேரக்டரில் நடித்த சாரா அர்ஜூன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சாரா அர்ஜுன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் தற்போது ஹீரோயின் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கும் இந்த படத்தில் மறைந்த இயக்குனர் ஜீவாவின் மகள் சனா மரியான் இயக்க இருப்பதாகவும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.