ஈழ நன்னாட்டில் இலவசக் கல்வி
இன்றும் தொடர்கிறது கல்வி கற்றிடல் அத்தியாவசியம்
பாலர் கல்வி முதல் பாடசாலைக் கல்வியின் பின்
பல்கலைக்கழகம் பயிற்சிக் கல்லூரிகள் சென்று
பயன்பாட்டைக் கருதிக் கல்வியைப் பெற்றிடுவோம்
தொழிற்பயிற்சி பெற்றிடலும் கல்வித் துறையில் உளதேயாம்
துறைபோகக் கற்றுத் தொழிற்பயிற்சி பெற்றிடின் வாழ்வில்
வெற்றி நிச்சயம்
பல்வேறு துறையில் பயிற்சி பெறப் பணமும் தேவை தான்
பற்றுடன் செலவுசெய்து பயிற்சி பெறல் அவசியமே
வாழ்வாங்கு வாழ்ந்திடற்குக் கல்வி வழி அமைக்கும்
வழிண்டு தேர்ச்சி பெறல் நமது சாதனையாம்
கல்வி முதல் நோக்கம் மனிதப் பண்பாடு வளர்த்தல்
கண்டுணர்ந்து நன்னெறியில் ஊன்றி நிற்றல் அவசியம்
சமூக ஐக்கியம் கருதி உயர்வு தாழ்வற்ற சமநிலை பேணி
சமய நெறிகளைப் பின்பற்றி நின்றிடின் நம்மால்
சகஜமான நல்வாழ்வை உறுதியாகக் கொள்ளல் ஆகும்
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக என வள்ளுவரும் புகன்றுள்ளார்
கல்வியின் முக்கியத்துவம் அனைவரும் உணர்தல் அவசியம்
கல்வியின்றேல் வாழ்வு ஒழுங்காகச் சோபிக்காது
எழுத்தறிவு தான் கல்வி எனச் சிலர் கருதலாம்
எழுத்தறிவு கல்வியின் ஓர் அம்சம் எனக் கொள்ளலாம்.
முதல் அம்சம் மனிதனைப் பண்படுத்தல் கல்வியின் இலக்கு
முக்கியத்துவம் கொடுத்துப் படிமுறையில் கல்விநோக்கங்களை அறிந்து
முறையாகக் கற்றுத் தேர்ச்சி கானல் அவசியமாகும்
முழு மனிதனாக ஒருவனை உருவாக்கும் வல்லபம்
கல்விக்குத் தான் உண்டு.