Samsung Electronics ஆனது சர்வதேச தொலைக்காட்சி சந்தையில் அதன் தலைமை ஸ்தானத்தினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, ஆம், இத்தொழில்துறையின் உச்சியில் 18 வருடமாகத் தனது ஆட்சியினைப் பாதுகாத்து வந்திருக்கின்றது.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia இன் கூற்றுப்படி, Samsung ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய தொலைக்காட்சிச் சந்தையில் 30.1% பங்கினைக் கைப்பற்றியது, இது 2006 முதல் தொழில்துறையின் தலைவராக அதன் நிலையினை உறுதிப்படுத்தியுள்ளது.
Samsung நிறுவனம் ஆனது அதன் மேம்பட்ட QLED மற்றும் OLED Model களால் இயக்கப்படும் Premium மற்றும் அகண்ட திரை தொலைக்காட்சி பிரிவுகள் தொடர்பாக சந்தைத் திட்டமிடலுக்கு மிகுந்த முக்கியத்துவத்தினை அளித்தத்தன் மூலமாக இச்சாதனையானது எட்டப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சமீபத்திய Neo QLED வடிவமைப்புகள் உட்பட Samsung இன் QLED TV தொடரில், ஒட்டுமொத்த விற்பனையில் 40 Million Unit களை கடந்துள்ளது. 2023 ஆம் வருடத்தில் மட்டுமே, QLED வரிசையில் 8.31 Million Unit விற்பனையினைப் பதிவு செய்துள்ளது.
Premium தொலைக்காட்சி பிரிவில், குறிப்பாக 75 அங்குலங்களுக்கும் அதிகமான தொலைக்காட்சிகள் மற்றும் 2,500 டாலருக்கும் அதிகமான விலையில் Samsung ஆனது தனது முன்னிலையினை நிரூபித்துக் காட்டியுள்ளது.