இந்த காதலர் தினம் அமைந்துள்ள பெப்ரவரி மாதத்தில் NDB வங்கி பல தனிப்பட்ட சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. கடனட்டை வைத்திருப்பவர்கள் சிறந்த சேமிப்புகள் மற்றும் அழகான அனுபவங்களில் அனுபவித்திட இதுவே சரியான நேரம். பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 29 வரை கிடைத்திடும் இந்த சிறப்புச் சலுகைகள், அன்பானவர்களுடன் அன்பளிப்பு மற்றும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
NDB கடனட்டை வைத்திருப்பவர்கள் காதலர் தின பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆடம்பரத்தை பேணுவதுடன், பல்வேறு வகையான பொருட்களில் 25% வரை சேமித்து மகிழ்ந்திடலாம். நாகரீகமான ஆடைகள் மற்றும் நேர்த்தியான நகைகள் முதல் காதல் இரவு உணவுகள், நவநாகரீக சன்கிளாஸ்கள், மறக்கமுடியாத பயண அனுபவங்கள், அழகான காலணிகள் மற்றும் இன்னமும் பல பொருட்களுக்கு, NDB கடனட்டை வைத்திருப்பவர்கள் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெற்றிடலாம்.
இந்த சலுகைகளுடன் இன்னுமொரு மகிழ்ச்சிகரமான செய்தி, கடனட்டை உரிமையாளர்கள் இந்த குறிப்பிட்ட சலுகை காலத்தில் ரூபா 25,000 அல்லது அதற்கு அதிகமாக தங்கள் NDB கடனட்டைகளை பயன்படுத்தினால் திரைப்படம் ஒன்றுக்கான இரண்டு டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
NDB வங்கி பலதரப்பட்ட விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்வதில் பெருமை கொள்கிறது.அதன் கடனட்டை வைத்திருப்பவர்கள் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற்றிடுவதை உறுதிசெய்கிறது.இந்த கூட்டுச்செயற்பாடு, அதன் மதிப்புமிக்க கடனட்டை உரிமையாளர்களுக்கு இணையற்ற பலன்களை வழங்குவது NDBயின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.