Home » வாழ்வென்றால் அப்படித்தான்

வாழ்வென்றால் அப்படித்தான்

by Damith Pushpika
February 18, 2024 6:59 am 0 comment

நீண்ட இப் பிரபஞ்சத்திலே…
நான் நானாகவே இருந்து விடுகிறேன்..!

நீல வானத்திலே…
கோடையும் மாரியும் வருவதுபோல…!

நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
எதுவும் நடக்கலாம்..!

இன்றைய நாளைப் போன்று…
நாளைய நாள் இல்லாமலிருக்கலாம்..!

கடலில் எழும் பூகம்பம் போல்…
அகத்தில் அலைகள் தோன்றலாம்..!

சிறு தூறலும் பெருமழையும் போல்…
வாழ்வில் எதுவும் நடக்கலாம்..!

அப்படித்தான்…!
வாழ்வென்றாலே அப்படித்தான்..!

நான் நானாகவே
இருந்து விடுகிறேன்..!

எனது வாழ்வை நானே வாழ்ந்து….
என்னை நானே செதுக்கியும் கொள்கிறேன்..!

என்னால் விரும்பப்படாத… நாவுகளில்
வரும் சொற்களை பொறுக்கி…
கவிதைகளை விதைத்துக் கொள்வேன்..!

பார்க்கும் பார்வைகளை பிடித்து
விழியம்பாய் மாற்றிக்கொள்வேன்..!

எனக்காக விடியும் பொழுதுகளை…
நானாகவே வாழ்ந்து விடுகிறேன்..!

யாரைப்போலும் வாழ்ந்து
என் வாழ்வை தொலைக்கமாட்டேன்..!

என்னை உங்கள் விருப்பம்போல்…
செதுக்க சொற்களை உருவாக்காதீர்கள்..!

தடைகளை ஓரமாய் ஒதுக்கி
செல்பவளல்ல நான்..!

ஒவ்வொன்றையும் உரமாய் சேகரித்து
வெற்றிக்கு விதை போடுபவள்..!

எனது சொற்களில்
என் வாழ்வை தேடாதீர்கள்..!

எனது சொற்கள்
தன்னைவிட பிறருக்காகத்தான்
அதிகம் பேசிக்கொண்டிருக்கும்..!

மஜினா உமறு லெவ்வை மாவடிப்பள்ளி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division