Home » பலஸ்தீன மக்களுக்காகவும், தாய்க்காகவும் பட்டத்தை பரிசளித்த ஓட்டமாவடி யஸீர் அறபாத்

பலஸ்தீன மக்களுக்காகவும், தாய்க்காகவும் பட்டத்தை பரிசளித்த ஓட்டமாவடி யஸீர் அறபாத்

by Damith Pushpika
February 18, 2024 6:00 am 0 comment

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா கடந்த 10, 11ஆம் திகதிகளில் நடைபெற்றது.

அன்றைய தினம் (11) 5ஆவது அமர்வில் தனது கலைமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அறபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன சால்வையை அணிந்து தோன்றியமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தனது பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் போது பலஸ்தீன சால்வையை அணிந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், பட்டமளிப்பு முடிந்த கையோடு, அவர் விழா மேடையில் ஏறி பலஸ்தீன சால்வையை அணிந்து கொண்டார். இது தொடர்பில் அவர் கருத்துத்தெரிவிக்கையில், “கல்வி ரீதியாக ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்த நாள் எனக்கு மகிழ்ச்சிகரமானது. என்றாலும், பலஸ்தீனத்தில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்படுவதை நினைக்கையில், இந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை” எனக்குறிப்பிட்டிருந்தார். எனவே தான், பலஸ்தீன மக்களுக்கான தனது ஆதரவையும் இஸ்ரேலுக்கான எதிர்ப்பையும், இது போன்றதொரு பெரிய மேடையில் வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்பதற்காகவே பலஸ்தீன கொடியை தான் சால்வையாக அணிந்து அம்மேடடையில் தோன்றியதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தனது இரண்டரை வயதில் தாயை இழந்த யஸீர் அறபாத் தனது தாயின் மூத்த சகோதரி மரியம் பீவியின் பராமரிப்பில் வளர்ந்து கல்வியையும் பெற்று பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் பட்டத்தைப் பெற்ற பின்னர் தன்னை வளர்த்து, தன் கல்விக்கு பக்கபலமாக இருந்து மரணித்த பெரியம்மாவின் புகைப்படத்தை கையிலேந்தி தன் பட்டத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

எம்.வை தாஹிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division