58
உன்
அழகின் விளிம்பில்
ஆயிரம் ஆண்கள்
ஆனந்தக்
களிப்புடன் ஆவலாய்
காத்திருந்தாலும்
உன் இருட்டறை இதயத்தில்
பிரகாசிக்கும் நட்சத்திரம்
நானாகக் கூடாதா
உன்
விழிகளின் ஒளியில்
நானொரு சிறிய
மின்மினிப் பூச்சியே
உன் பிரகாசத்தில்
நானுமொரு முழு
நட்சத்திரமாய் வலம் வர
உன் அழகின்
விளிம்பில் ஓர் ஓரமாய்
ஒட்டிக் கொள்ளவா?