146
சேவையிலிருந்து நீக்கப்பட்ட 200 பஸ் வண்டிகள் புனரமைக்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன. இந்த நிகழ்வு அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்தகெடகொட, குணதிலக ராஜபக்ஷ, இ.போ.ச. தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக மற்றும் இ.போ.ச. பிரதி பொது முகாமையாளர் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.