Home » யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் தடுப்புகளை உடைத்த இரசிகர்கள்

யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் தடுப்புகளை உடைத்த இரசிகர்கள்

06 பேர் கைது, 03 பேர் காயம்

by Damith Pushpika
February 11, 2024 6:20 am 0 comment

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கி 3 பேர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். முற்றவெளி மைதானத்தில் இலவசமாக இசை நிகழ்ச்சியை கண்டுகளித்துக்கொண்டிருந்த இரசிகர்களில் சிலர், அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, கட்டணம் செலுத்தி இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக்கொண்டிருந்த இரசிகர்கள் இடத்தில் நுழைந்து மேடைவரை சென்றதாகவும் கமெரா பொருத்தப்பட்டு ஒலி அமைப்பு செய்யப்பட்ட மேடைகள், பனைமரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி இவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது கட்டுக்கடங்காமல் போன இரசிகர்கள் கூட்டத்தால் கதிரைகள், தண்ணீர் தாங்கிகள் உள்ளிட்டவையும் சேதமாக்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இசை நிகழ்ச்சி சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதுடன், மேலதிகமாக பொலிஸாரும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் மைதானத்துக்கு அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் இதன் பின்னர் இசை நிகழ்ச்சியை மீள ஆரம்பித்து அவசரமாக முடித்துக்கொண்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். விசேட நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division