இலங்கையின் ‘ஆபிரிக்கக் கொள்கையோடு மீண்டும் இணைதல்’ திட்டத்துக்கு தமது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்திய இலங்கைக்கான ருவாண்டா, அங்கோலா மற்றும் மொரோக்ேகா நாட்டுத் தூதுவர்கள் இம்மாதம் 05ஆம் திகதி புதுடில்லியில் இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆபிரிக்க விவகாரங்கள், செயல்திறன் மதிப்பாய்வு மற்றும் செயல்படுத்தலுக்கான மேலதிக செயலாளர், ஓ.எல். அமீர் அஜ்வாத்தை சந்தித்து அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சுக்கும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்குமிடையில் புரிந்துணர்வொப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசித்தனர். இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் மேற்படி ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து சாத்தியமான பகுதிகளையும் ஆராயும்.
இலங்கையின் ‘ஆபிரிக்கக் கொள்கையோடு மீண்டும் இணைதல்’
60
previous post