47
எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படத்தில் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்களில் நடித்த அவர், மீரா சோப்ரா என்ற தனது இயற்பெயரில் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், தனக்குத் திருமணம் நடக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “மார்ச் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெறுகிறது. தேதி முடிவாகிவிட்டது”என்றார். ஆனால், மணமகன் யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை